Tuesday, November 25, 2014

அரசாங்கத்தின் 10வது வரவுசெலவுத்திட்டம்: 95 மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேற்றம்!

Tuesday, November 25, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 10வது வரவுசெலவுத்திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
 
2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் கிடைத்தன. 2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் கிடைத்தன.
 
எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதன்போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா பெயர் குறிப்பிட்டே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். இதற்கிணங்க பெயர் குறிப்பிடப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
 
அரசிலிருந்து வெளியேறிச் சென்ற மைத்திரிபால சிறிசேன, டொக்டர் ராஜித சேனாரட்ன, வசந்த சேனாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திசாநாயக்க, அர்ஜூண ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரர், இராஜதுரை உள்ளிட்ட 15 பேர் வாக்கெடுப்பின் போது சபையில் சமுகமளித்திருக்கவில்லை.
 
ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர், அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். எதிர்க்கட்சி சார்பில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, லக்ஷ்மன் கிரியல்ல, அப்துல் ஹாலீம் ஆகியோரும், சுயாதீன எம்பியான ஜே.ஸ்ரீரங்கா, டிரான் அலஸ் எம்.பி ஆகியோரும் வாக்கெடுப்பின் போது சபையில் சமுகமளித்திருக்க வில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்பன வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களித்தன.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தேசிய காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. இடதுசாரிக் கட்சிகள் என்பன ஆதரவாக வாக்களித்தன.
 
அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களின் பெயர்கள் அழைக்கப் பட்டபோது புஅரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாகக் கூறியவர்கள் வாக்களிக்க வரவில்லையெனபூ என சபையில் கூக்குரல்கள் எழுந்தன.2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்று மணி நேரம் உரையாற்றியிருந்தார்.
 
25ஆம் திகதி சனிக்கிழமை வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது. தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத் தையடுத்து கடந்த 2ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இந்த வாக்கெடுப்பின் போதும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய பெயர் குறிப்பிடப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் வாசிப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது.
 
இதனையடுத்து கடந்த நவம்பர் 3ஆம் திகதி திங்கட்கிழமை வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பமானது. தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்ற குழுநிலை விவாதம் நேற்று 17ஆவது நாளாகும். இது நிதி அமைச்சுக்கான விவாதமாக நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து மாலை 5.30 மணிவரை நடைபெற்றது. மலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 95 மேலதிக வாக்குகளால் பட்ஜட் சபையில் அங்கீகாரம் பெற்றது.
 
இறுதியில் சபாநாயகர், ஆளும் தரப்பின் பிரதம கொரடா மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடா ஆகியோர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். பாராளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.
 
இதேவேளை, வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தை முடித்துவைத்துப் பேசிய சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா கூறியதாவது, அரசு வீழ்ந்துவிடும் என்று ஐ.தே.கவினர் கனவுகண்டுகொண்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எவருமே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆட்சியமைக்க இடளிக்க மாட்டார்கள்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்ப கர்த்தாவான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் புதல்வர் அநுர பண்டாரநாயக்கவும் கட்சியிலிருந்து சென்றார். சந்திரிகா பண்டாரநாயக்கவும் விஜயகுமாரதுங்கவும் தனியான ஒரு கட்சியை உருவாக்கிக் கொண்டு சென்றனர்.
 
ஆனால் ஜனாதிபதி 8ஆம் திகதி அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக் கவின் ஜன்மதினத்தன்று தாம் ஆட்சியமைப்பதாக ரவி கருணாநாயக்க கூறுகிறார்.
 
அவர் எப்போதும் கனவுகண்டு கொண்டி ருக்கிறார். அவரது கனவு என்றுமே பலித்ததில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.
 
யுத்தத்துக்காக பெருந்தொகை பணம் செலவு செய்ய வேண்டியிருந்தது. அதனை முடிவுக்கு கொண்டுவந்தார். பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழித்து இன்று நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கச் செய்தார். விவசாயத்துறை ஊக்குவிக்கப்பட்டது. இதன்மூலம் உள்நாட்டு உற்பத்திகள் அதிகரித்தன.
 
இவற்றின் மூலம் பொருளாதார ரீதியாக வெற்றியடைய முடிந்தது. இதற்கு உந்துசக்தியாக இருந்த ஜனாதிபதிக்குத்தான் பெருமைகள் எல்லாம் சென்றடைய வேண்டும்.
 
நீர்ப்பாசனம், நீர்வழங்கல் உட்பட நாட்டின் தேசிய உட்கட்டமைப்புக்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட்டன. மக்களின் வாழ்க்கை மக்களுக்கே தெரியும். அவர்கள் என்றுமே ஜனாதிபதியை மறக்கமாட்டார்கள். அவருடனேயே இருப்பார்கள். மக்களின் பலத்துடன் நாம் வெற்றிபெறுவோம்.
 
நிறைவேற்று அதிகாரம் பற்றி பேசும் போது ரவி கருணாநாயக்க பிஇடிவிழும் நிறைவேற்று அதிகாரம்பீ என்றார். இந்த நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு வந்ததே ரணில் விக்ரமசிங்கவின் மாமனார் என்று மறந்துவிட்டாரா?
 
அவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த காலத்தில் இது இடிவிழும் நிறைவேற்று அதிகாரம் என்று தெரியவில்லையோ? என்றும் அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சென்றவர்களாக இருந்தாலும் இருப்பவர்களாகவிருந்தாலும் ரணிலுக்கு ஆட்சியைப் பெற்றுக்கொடுக்க மாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment