இலங்கை::புத்தளம் மாவட்டத்தில் 17வது கட்டமாக இராணுவ வீர்ரகளுக்கு வழங்கும் முகமாக நிர்மானிக்கப்பட்ட 101 வீடுகள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இராணுவ வீர்ரகளுக்கு இன்று (நவ.01) வழங்கப்பட்டது
அத்துடன் பிரதான வைபவம் புத்தளம் ஆனமடுவ மாஉஸ்வெவ ரத்னபால நவோத்யா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றதுடன் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆனமடுவ, நவகத்தேகம, கோனடகடவல, தர்ஸன மாவத்தையில் வசிக்கும் இலங்கை விமானப்படை வீரரான 31013 கோப்ரல் எச்எம்என்ஜி. அத்தபதுவிற்காக நிர்மானிக்கப்பட்ட வீடு திறந்து வைக்கப்பட்டது.
யுத்த வீர்ரகளின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுடன் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களின் கண்கானிப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ அவர்களால் இத்திட்டம் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது
நமக்காக நாம்” திட்டத்தின் கீழ் இதுவரைகாலமும் கண்டி, குருநாகல், மாதரை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, காலி, அம்பாரை, மட்டக்களபு, திருகோனமலை, களுதுரை, கேகாலை, பொலன்னருவை, கம்பகா, இரத்தினபுரி, மாத்தளை, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மேலும் புத்தளம் மாவட்டத்தில் 17 வது கட்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் முப்படை வீரர்களுக்கு கீழ் காணப்படும் வகையில் பகிரந்தளிக்கப்பட்டது
இராணுவம் 63 வீடுகள்
கடற்படை 22 வீடுகள்
விமானப்படை 16 வீடுகள்
மொத்தம் 101 வீடுகள்
அத்துடன் இந்த வீடுகள் அனைத்தும் இராணுவத்தின் 4வது பொறியியல் படைப்பிரிவினால் நிர்மானிக்கப்பட்டது..
அதுமட்டுமன்றி குறித்த பிரதேசத்தில் காணப்படும் குறைந்த வசதிகளுடன் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டன அந்த வகையில் மாஉஸ்வெவ ரத்னபால நவோத்யா வித்தியாலயம் புத்தளம் ஆணமடுவ கோன்கடவல வித்தியாலயம், மற்றும் பராக்ரம ஆரம்ப பாடசாலை என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் மாஉஸ்வெவ ரத்னபால நவோத்யா வித்தியாலய மானவர்களுக்கு புத்தகப் பைகளும் பாடசாலைக் காலணிகளும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள், இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூர்ய, இராணுவ தளபதி லுதினன் ஜெனரல் ஜகத் ரத்நாயக, கடற்படைத் தளபதி ரியர் அடமிரல் ஜயன்த பெரேரா, விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் குனதிலக, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ உப தலைவி இந்து ரத்நாயக, புத்தளம் மாவட்ட ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெருந் தொகையான மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment