Thursday, October 23, 2014

கனடா பாராளுமன்றத்திற்குள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!

 Thursday, October 23, 2014
ஒட்டவா::கனடாவின் தலைநகரமான ஒட்டவாவில் அந்நாட்டின் பாராளுமன்றம் உள்ளது.  நாட்டின் மையப்பகுதியில் உள்ள இந்த பாராளுமன்ற அரங்குக்குள்  துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் அடுத்தது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாராளுமன்றத்தில் இருந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாரளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய போர் பாதுகாப்பு நினைவக சின்னத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார் என்பது இன்னும் அடையாளம் கண்டறியப்படவில்லை. அவர் இன்னும் பாராளுமன்றத்திற்குள்ளேயே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பாரளுமன்ற அரங்குக்குள் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போது  அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அந்த வளாகத்திற்குள்தான் இருந்தாகவும் இருப்பினும் அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக அங்கிருந்து  வெளியாகும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற ஹில் பகுதி முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

குறைந்தது 10 ராயல் கனடியன் மவுண்டட் போலீசார் பாராளுமன்ற ஹில்லின் மத்திய பிளக்கிற்குள் குண்டு துளைக்காத உடைகள் அணிந்து அரங்கிற்குள் நுழைந்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கும் முன் சிறிய கியூபெக் நகரத்தில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களை தாக்கி விட்டு  மர்ம நபர் ஓடிச்சென்ற சம்பவம் நடைபெற்றது. இது தீவிராத செயலாக இருக்கும் அதிகாரிகள் கருதும் நிலையில், பொதுவாக அமைதியாக காணப்படும் கனாடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

No comments:

Post a Comment