Friday, October 31, 2014
இலங்கை::சமய நிகழ்வான தீபாவளி நிகழ்வு அண்மையில் போலந்து நகரின் வோர்சோ நகரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போலந்தில் அமைந்துள்ள இலங்கைத்தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் போலந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் சிங்கள மக்கள் என அனைவரும் எவ்வித பேதமுமின்றி கலந்து சிறப்பித்துள்ளனர்.
போலந்துக்கான இலங்கைத்தூதுவர் டி.எஸ்.டி.சில்வா வரவேற்புரையை நிகழ்த்தி அதன் பின்னர் வந்த பார்வையாளர்கள் மத்தியில் தீபாவளியின் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறியதுடன், சமூக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது உறவினை பலப்படுத்துவதற்கு இந்நிகழ்வு பெரிதும் வழிவகுத்துள்ளது என்றார்.
வெவ்வேறு நம்பிக்கைகள், பாரம்பரியங்களை கொண்ட அனைத்து இந்து மதத்தினரும் இங்கு ஒன்றுகூடி தமது கருத்துக்களை பரிமாறினர். நடைபெற்ற தீபாவளி நிகழ்வின் மையக்கருத்தாக "ஒற்றுமை" எனும் கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் தீபங்களின் விழாவான இந்நிகழ்வினை கொண்டாட அனைத்து மக்களும் இன, மத, சமய பேதமின்றி சகோதர, சகோதரிகளாக கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். தூதுவரின் உரையின் பின்னர், இந்து சமய முறைமையிலான சமயச்சடங்குகள் இடம்பெற்றன. அதன்போது விநாயகர் திருவுருவத்துக்கு மலர் தூவி, தீபம் காட்டி மந்திர உற்சானங்களுடன் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
அனைவரும் தீபத்திருநாள் முக்கியத்துவத்தினை வெளிக்காட்டும் வகையில் அனைத்து மக்களதும் வாழ்வில் இருள் அகன்று ஒளி பிரகாசிக்க வேண்டுமென வழிபாடுகள் நடத்தினர். நிகழ்வின் இறுதியில் இந்து பாரம்பரிய இரவு உணவுவகைகள் தூதரக ஏற்பாட்டில் வழங்கப்பட்டதுடன், அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் சிறுமியொருவர் நடனம் நிகழ்த்தினார். கலந்து கொண்ட அனைவரும் தூதரகத்தினரையும் தூதுவரையும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment