Tuesday, October 28, 2014
பெய்ஜிங்::சீனாவில் மரண தண்டனையில் இருந்து 9 குற்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
சீனாவில்
உலக சட்ட திட்டங்களுக்கு எதிராக அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவதாக
மனித உரிமைகள் குழு புகார் கூறி வருகிறது. இங்கு கடந்த ஆண்டில் மட்டும்
2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக புள்ளி விவரங்கள்
வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, அது குறித்து சீன கம்யூனிஸ்டு கட்சி கூடி
ஆலோசனை நடத்தியது. பொதுவாக இங்கு 55 குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண
தண்டனை விதிக்கப்படுகிறது.
அதில் இருந்து 9 குற்றங்களுக்கு மரண
தண்டனையில் இருந்து விதிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட
விரோதமாக நிதி சேகரித்தல், ஆயுதம் கடத்தல், அணுமூலப் பொருள் கடத்தல், கள்ள
நோட்டு தயாரித்தல் போன்ற குற்றங்கள் விதிவிலக்கு பட்டியலில் உள்ளன.
இந்த
பரிந்துரையை சீன அரசு ஏற்றுக் கொண்டால் அங்கு 46 குற்றங்களுக்கு மட்டுமே
மரண தண்டனை விதிக்கப்படும். அதன் மூலம் ஓரளவு அந்த தண்டனை குறையும்
வாய்ப்பு உருவாகும் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment