Wednesday, 01, October, 2014
இலங்கை::இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60 ஆவது ஆண்டினை கொண்டாடும் வகையில் 2015 ஆம் ஆண்டு முழுவதும் நிகழ்வுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது பற்றி அமைச்சு மேலும் தெரிவிக்கையில், இலங்கை வெளிவிவகார அமைச்சும் தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சும் இணைந்து "பகிரப்பட்ட செழிப்பினூடாக அனைவருக்குமான இணைப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் சின்னங்களுக்கான வடிவமைப்பு போட்டியொன்றினை நடாத்தவுள்ளது.
இலங்கை மற்றும் தாய்லாந்தினை சேர்ந்த போட்டியாளர்கள் தம்மால் வடிவமைக்கப்பட்ட சின்னங்களை தத்தம் நாட்டு வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்க முடியும். விண்ணப்பதாரிகளின் வயது 18 தொடக்கம் 35 னினைத் தாண்டாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் தமது வடிவமைப்புக்களுடன் விண்ணப்பப்படிவங்களினையும் இணைத்து கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, குடியரசுக் கட்டிடம், கொழும்பு 01 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் . கடிதஉறைகளினன் இடது பக்க மேல் மூலையில் "இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே இராஜதந்திர உறவுகளை பேணும் வகையில் 60 ஆவது ஆண்டு நிறைவு சின்ன வடிவமைப்பு போட்டி" என்று குறிப்பிடப்பட வேண்டும்.
போட்டியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவமைப்புக்களை எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்ட போட்டியாளருக்கு 100,000 இலங்கை ரூபாவும், தாய் பாஹ்த் 25,000 உம் பரிசாக வழங்கி வைக்கப்படும்.
No comments:
Post a Comment