Thursday,September, 17, 2014
இலங்கை::வடக்கு மாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற “நகர மீளெழுச்சி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேலும் கூறுகையில், இந்த யுகத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச நகரம் பாரிய எழுச்சியைக் கண்டுள்ளது. மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதிலிருந்து தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம். பொருளாதாரம் போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள மக்கள் நகரமயமாக்கல், நகர அபிவிருத்தியினை உச்சகட்டமாக அனுபவித்து வருகின்றனர். 2020 இலங்கையில் மக்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம். இந்நிலையில் இந்த நகர எழுச்சித்திட்டம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. கொழும்பை போன்று காலி, மாத்தறை, நுவரெலியா, நகரங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்டி, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் துரதிஷ்டவசமாக அரசியல் மற்றும் அரசியல் மாற்றம் காரணமாக சிலர் ஒத்துழைப்பதில்லை. மாறாக கொழு ம்பு மாநகர சபையை நாம் முன் னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். ஏனெனில், கொழும்பு மாநகர சபையை எதிர்க் கட்சி யினரே ஆள்கின்றனர். என்றாலும் மேயர் உட்பட சகல தரப்பினரும் மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார். இதன் காரணமாக கொழும்பை அபிவிருத்தி செய்யவும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவும் முடிந்தது.
வட மாகாண முதலமைச்சர் அரசுடன் ஒத்துழைப்பதில்லை. இதனால் அங்கு ள்ள மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment