Monday, September 29, 2014

ஜெயலலிதா விடுதலை கோரி: பல்லாவரம், பம்மல், தாம்பரத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம்!

Monday, September 29, 2014
சென்னை::தாம்பரம்:சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி பல்லாவரம் பஸ் நிலையத்தில் தன்சிங் எம்எல்ஏ தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பல்லாவரம் நகரமன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், கவுன்சிலர்கள் குமார், சந்திரகேசவன், எழிலரசி சண்முகம், குமரேசன், அபிராமி ஜனார்த்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் அருகே நகரமன்ற தலைவர் இளங்கோவன், அனாகாபுத்தூரில் நகரமன்ற தலைவர் வேலாயுதம், தாம்பரம் தொகுதி சார்பாக சின்னையா எம்எல்ஏ, நகரமன்ற தலைவர் கரிகாலன், சிட்லபாக்கம் பேரூராட்சி தலைவர் மோகன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தாம்பரம் பகுதிகளில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. தாம்பரம் பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படும் 225 பஸ்களும், குரோம்பேட்டை பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படும் 165 பஸ்களும் வழக்கம் போல இயக்கப்பட்டன. இருப்பினும் குறைவான அளவில் சர்வீஸ் உள்ளது. -

No comments:

Post a Comment