Monday, September 29, 2014
இலங்கை::இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரையும் அக்டோபர் 10-ம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ரத்தினசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற முனியசாமி, கோபு, ஸ்டிபன், சங்கர் ஆகிய 4 பேர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது விசைப்படகு பழுதடைந்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்துவந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 4 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் மீனவர்கள் ஊர்காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இலங்கை நீதிமன்றத்துக்கு விடுமுறை நாள் என்பதால் மீனவர்கள் 4 பேரும் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 4 பேரையும் அக்டோபர் 10-ம் தேதி வரை சிறையிலடைக்குமாறு ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment