Sunday, September 28, 2014
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, 1990 - 91 காலக்கட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ரஷீத் மசூத். எம்.பி.பி.எஸ்., இட ஒதுக்கீட்டில், முறைகேடாக பணம் பெற்று ஒதுக்கீடு செய்த வழக்கில், டில்லி சி.பி.ஐ., கோர்ட், கடந்த ஆண்டு செப்., 19ம் தேதி, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. எனவே,எம்.பி., பதவியை இழந்தார்.
லாலு பிரசாத் யாதவ், 1990ல் பீகார் முதல்வராக இருந்தார். அவர் மீதான, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட், 2013 அக்., 3ம் தேதி, ஐந்தாண்டு சிறை மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அதனால், அவரது எம்.பி., பதவி பறிபோனது.
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி, கடந்த ஏப்ரலில், எம்.பி., பதவியை இழந்தார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததால், எம்.எல்.ஏ., மற்றும் முதல்வர் பதவியை இழந்துள்ளார்.
சென்னை::சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, ஊழல் வழக்கில்
பதவி இழந்து, சிறை சென்றுள்ள முதல் முதல்வராகி உள்ளார். அதே நேரத்தில்,
வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக, அவர் பதவி இழந்துள்ளது, இது,
இரண்டாவது முறையாகும்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்த, அ.தி.மு.க.,வை இணைத்து, முதல்வரானார் ஜெயலலிதா. அதன் பின், ராணுவ கட்டுக்கோப்போடு, அ.தி.மு.க.,வை வழி நடத்தினார்.கடந்த 2001, சட்டசபை தேர்தலின் போது, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை என, நான்கு தொகுதிகளில் போட்டியிட, ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

தண்டனை:
ஒருவர்
இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற விதி இருப்பதால்,
நான்கு இடங்களிலும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்படி தேர்தலில்
போட்டியிட முடியாமல் போனாலும், தமிழகம் முழுவதும், சூறாவளி சுற்றுப்பயணம்
செய்து, அ.தி.மு.க.,வுக்கு, ஆதரவு திரட்டினார். அதனால், அ.தி.மு.க., 132
இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது.அந்த நேரத்தில், 'டான்சி' நில
பேர வழக்கில், மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்த ஜெயலலிதாவை,
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வராக தேர்வு செய்ததை அடுத்து,
அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து
வைத்தார்.ஆனால், டான்சி நில பேர வழக்கில், தண்டனை பெற்ற ஜெயலலிதாவை,
முதல்வராக்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது செல்லாது'
என, 2001 செப்டம்பர் 21ம் தேதி தீர்ப்பளித்தது. அதனால், ஜெயலலிதா உடனடியாக
பதவி விலகினார். புதிய முதல்வராக, பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.
விசாரணை:
கடந்த
2011 தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக,
ஜெயலலிதா முதல்வரானார். இந்நிலையில், அவர் முதல் முறையாக, முதல்வராக பதவி
வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தொடரப்பட்ட வழக்கு
விசாரணை முடிவுக்கு வந்து, அவருக்கு தண்டனையும், அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளது.அதனால், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, சிறை
சென்றுள்ள முதல் முதல்வராகி உள்ளார். மேலும், தமிழகத்தில், ஊழல் வழக்கில்
தண்டனை பெற்று, பதவியை இழக்கும் இரண்டாவது நபர் இவர்.இவருக்கு முன்,
சுடுகாட்டு கூரை வழக்கில், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால்,
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி பதவியை இழந்தார்.நேற்றைய
தீர்ப்பால், ஜெயலலிதாவின் பதவி இரண்டாவது முறையாக பறிபோவதோடு, இரண்டாவது
முறையாக சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி இழந்த மக்கள் பிரதிநிதிகள்:
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, 1990 - 91 காலக்கட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ரஷீத் மசூத். எம்.பி.பி.எஸ்., இட ஒதுக்கீட்டில், முறைகேடாக பணம் பெற்று ஒதுக்கீடு செய்த வழக்கில், டில்லி சி.பி.ஐ., கோர்ட், கடந்த ஆண்டு செப்., 19ம் தேதி, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. எனவே,எம்.பி., பதவியை இழந்தார்.
லாலு பிரசாத் யாதவ், 1990ல் பீகார் முதல்வராக இருந்தார். அவர் மீதான, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட், 2013 அக்., 3ம் தேதி, ஐந்தாண்டு சிறை மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அதனால், அவரது எம்.பி., பதவி பறிபோனது.
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி, கடந்த ஏப்ரலில், எம்.பி., பதவியை இழந்தார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததால், எம்.எல்.ஏ., மற்றும் முதல்வர் பதவியை இழந்துள்ளார்.
No comments:
Post a Comment