Saturday, September 27, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க ஐ.நா. உரை!

Saturday, September 27, 2014
நியூயார்க்::ஐக்கிய நாடுகள் சபையின் 69 வது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் தற்போது நடைபெறு கின்றது. இக்கூட்டத்தில் இலங்கை உட்பட ஐ. நா வில் அங்கம் வகிக்கும் ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய,
 
வட தென் அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய கண்டங்களைச் சேர்ந்த 193 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
 
இப்பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் உரையாற்றினார். அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரையாகும்.
 
அந்த உரையில் ஜனாதிபதி அவர்கள் ஐ. நா ஸ்தாபிக்கப்பட்டு இற் றைக்கு சுமார் ஏழு தசாப்தங்களாகின்றன. இச்சபை அமைக்கப் பட்டதன் பயனாக மூன்றாம் உலகப் போர் தவிர்க்கப்பட்டு இருக் கின்றது. அதேநேரம் உலகில் பல முன்னேற்றங்களும் ஏற்பட்டுள் ளன.
 
குறிப்பாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சிறுவர்களுக்கு கல்வி ஊட் டப்படுவதற்கும், நாடுகளுக்கிடையிலும் பிராந்தியங்களுக்கிடையி லும், உலகிலும் சமாதானம் நிலவுவதற்கும் ஐ. நா பெரிதும் உதவியுள்ளது. இருப்பினும் நிதி உதவி வழங்கும் தரப்பினரின் பணயக் கைதியாக ஐ. நா நிறுவனங்கள் செயற்படுகின்றன. இந் நிலமை மாற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
ஐ. நா வினதும் அதன் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் குறித்து உலகில் பலவிதமான விமர்சனங்கள் நிலவுகின்றன. இருப்பினும் ஐ. நா வின் செயற்பாடுகளை விமர்சிக்கவோ, கருத்துத் தெரிவிப் பதற்கோ எவரும் பெரிதாக விரும்புவதில்லை. அதிலும் விரல்விட் டெண்ணக் கூடிய ஒரு சில தலைவர்களே ஐ. நா. வின் தவறான செயற்பாடுகளை சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறான தலைவர்க ளில் ஒருவராகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விளங்குகின்றார். இதற்கு அவர் ஐ. நா. வில் உலகத் தலைவர்கள் முன்பாக நேற்று முன்தினம் ஆற்றிய உரை நல்ல உதாரணம்.
 
உண்மையில் ஐ. நா. வானது செல்வம் படைத்தவனையும், பலசாலி யையும் ஒரு கண்கொண்டும், பலவீனர்களையும், வறியவர்களை யும் மற்றொரு கண்கொண்டும் நோக்கக்கூடாது. அது எல்லோரை யும் ஒரேவிதமாகச் சமமாகப் பார்க்க வேண்டும். அதுவே அதன் தார்மீகக் கடமை.
2
0 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் உலகம் இரண்டு பெரும் போர்களைச் சந்தித்தது. அப்போர்களினால் இலட்சக்கணக் கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. கோடிக்கணக்கான பெரு மதிமிக்க சொத்துக்களும் அழிக்கப்பட்டன. இப்பேரழிவுகளுக்கு அன்று நிலவிய பலவான், பலவீனன் என்ற நிலைப்பாடே அடிப் படையாக அமைந்தது.
 
அதனால் இவ்வாறான ஒரு பேரழிவு இனி ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற நன்நோக்கில் தான் இரண்டாம் உலகைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பயனாக 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஐ. நா. சபை ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வாறான நன்நோக்கைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இவ்வமைப்பின் நோக்கத்தை மீள உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான் உலகத் தலைவர்கள் வருடா வருடம் செப்டம்பரில் பொதுச் சபை கூட்டத்தில் ஒன்று கூடுகின்றனர்.

இவ்வாறான சூழலில் ஐ. நா. ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கத்துக்கு அப்பால் அதன் நிறுவனங்கள் சிலரின் தீய நோக்கங்களுக்கு துணைபோகும் வகையில் செயற்படுகின்றன. அந்நிலைமை ஐ.நா மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதிக்கக் கூடியதாகும்.

இப்படியான ஒரு நிலைமைக்குத்தான் பயங்கரவாதத்தின் கொடூரத்தி லிருந்து மீண்டுள்ள இலங்கை தற்போது முகம்கொடுத்துள்ளது. மூன்று தசாப்த காலப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்நாடு இன்று துரித அபிவிருத்திப் பாதையில் பயணிக்கின்றது. அதன் பயன்களை மக்கள் அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். இன்று நாட்டில் அச்சம், பீதி இல்லாத ஜனநாயக சூழல் தலைத் தோங்கியுள்ளது.

இருப்பினும் இம்முன்னேற்றங்கள் எதுவும் கருத்தில் கொள்ளப்படாது சிலரின் தீய நோக்கத்திற்காக யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை துரதிஷ்டவசமாகப் பழியாகியுள்ளது. உலக நாடுகள் கவனம் செலுத்தவேண்டிய எத்தனையோ விடயங்கள் இருந்தும் அவை கருத்தில் எடுக்கப்படாது இலங்கை இலக்கு வைக்கப்பட்டிருக் கிறது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்றும் ஜனாதிபதி தன்னுரையில் சுட்டிக்காட்டினார்.
 
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம்மிக்க கருத்துக்களை உலகத் தலைவர்கள் முன் வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களை பாராட்டுவதும், கெளரவிப்பதும் எல்லோரதும் பொறுப்பு.

No comments:

Post a Comment