Saturday, September 27, 2014
டமாஸ்கஸ்::சிரியாவில்
‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசம் பகுதியில் அமெரிக்க போர்
விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்து
மற்றும் பிரான்ஸ் நாடுகளின் போர்
விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டு
வருகின்றன.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள பெல்ஜியம்,
டென்மார்க் ஆகிய நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்தன. நேற்று அந்த
நாடுகள் போர் விமானங்களை அனுப்பியது.
அவை சிரியாவில் உள்ள ஐ.எஸ்.
தீவிரவாதிகளின் நிலைகள் மீது சரமாரி குண்டு வீசி தாக்கின. அமெரிக்காவின்
போர் விமானங்கள் மற்றும் டிரோன்ஸ் (ஆளில்லா விமானங்களும்) குண்டு வீச்சு
தாக்குதலில் ஈடுபட்டன.
அதில் டெர் எல்–ஷோர் மாகாணத்தில்
தீவிரவாதிகளின் பல நிலைகள் அழிக்கப்பட்டன. தீவிரவாதிகளின் 4 டாங்குகள்
அழிக்கப்பட்டன, வடக்கு சிரியாவில் கோபானி நகரில் குர்தீஷ் படை வீரர்கள்
தீவிரவாதிகளின் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அங்கு
கடும் சண்டை நிலவுகிறது. இங்குள்ள மலைப்பகுதியில் தீவிரவாதிகளுடன் கடும்
துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஈராக்கில் அமெரிக்க படைகள் 7
இடங்களில் குண்டு வீசியது. அதில் ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன.
ஈராக்
மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நடத்தும்
தாக்குதலுக்கு மத்திய கிழக்கு உள்பட 40 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா
கூட்டணி நாடுகளின் இந்த தாக்குதலுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபை கூட்டத்தில் ரஷிய வெளியுறவு மந்திரி கெர்ஜிலாவ் ரோவ் பேசினார்.
அப்போது
சிரியா தீவிரவாதிகள் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்துக்கு புறம்பானது.
ஏனெனில் அவர்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க கூட்டணி நாடுகள்
சிரியாவிடம் அனுமதி பெறவில்லை.
அவர்கள் தீவிரவாதிகளை அழிக்க சிரியாவிடம் ஒத்துழைப்பு கோர வேண்டுமே தவிர தன்னிச்சையாக தாக்குதல் நடத்தக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment