Thursday, September 4, 2014

ஐ.நா ஆணையை மீறியதாலேயே சர்வதேச விசாரணைக்குழுவை அனுமதிக்கவில்லை: அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம்!

Thursday, September 04, 2014     
இலங்கை::இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை, ஐ.நாவின் ஆணையை  மீறியது என்பதாலேயே அதற்கு அனுமதி வழங்கவில்லையென அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க் பத்திரிகை வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தலையங்கத்துக்கு பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்திலேயே இலங்கைத் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச சட்டம் தொடர்பான அடிப்படையை மீறும் வகையிலும், இலங்கையின் இறைமையை மீறும் வகையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க செயற்பாடுகளைக் குழப்பும் வகையிலும் ஐ.நாவின் சர்வதேச விசாரணைகள் அமைந்துள்ளன. இதனாலேயே இந்த விசாரணைக்குழுவுக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
 
புலிகளின் செயற்பாடுகள் முழு நாட்டையும் பாதித்ததால் சமாதான முயற்சிகள் பாதிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நிலவியது. சர்வதேச நிபுணர்களை உள்ளடக் கியதாக உள்ளூர் விசாரணைகள் செயற்பாடுகள் ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நல்லிணக்க செயற்பாடுகளைக் குழப்பும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கத்தைப் போலன்றி, பொறுப்புவாய்ந்த சமூக, கலாசார மற்றும் இன ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் உள்ளூர் செயற் பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
 
1931ஆம் ஆண்டு முதல் இலங்கை எதுவித குழப்பமுமற்ற ஜனநாயகத்தை அனு பவித்து வருகிறது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதலாவது வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றி யுள்ளனர். ஏனைய நாடுகளைவிட இலங்கையில் மனித உரிமைகள் மதிப்பளிக்கப்படுகின்றன என்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment