Tuesday, September 30, 2014
நியூயார்க்::அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு முன்னாள் அதிபர் பில்
கிளிண்டன் மற்றம் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது
அவருடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் உடனிருந்தார்.
இருவருடனான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது. பிரதமர் மோடி மற்றும் சுஷ்மா ஆகியோர் கிளிண்டன் தம்பதியரை மகிழ்ச்சியாக வரவேற்றதுடன் இருவரும் கிளிண்டன் தம்பதியினர் தாத்தா பாட்டியானதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கிளிண்டனின் மகளான செல்சீக்கு கடந்த வாரம் தான் பிரசவம் நடந்தது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அக்குழந்தைக்கு கார்லோட்டே என்று பெயரிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தேசிய பொருளாதாரத்தை கட்டமைத்து வரும் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை. அந்த வகையில் உங்கள் செயல்பாடுகளை பார்த்து மிரண்டுவிட்டேன் என்று கிளிண்டன் கூறினார். வரும் 2016 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள அமெரிக்க செனட் சபை தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடவுள்ள நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

No comments:
Post a Comment