Tuesday, September 30, 2014

வடக்கின் அபிவிருத்திக்காக கடந்த 9 வருடங்களிலும் 666 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு:லக்ஷ்மன் யாப்பா!

Tuesday, September 30, 2014
இலங்கை::வடக்கின் அபிவிருத்திக்காக கடந்த 9 வருடங்களிலும் 666 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ‘ஈர்ப்பு சக்திவாய்ந்த வடக்கில் முதலிடுக’ எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்ததாவது :- 1995 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இருந்த காலத்தில் வடக்கின் அபிவிருத்திக்காக 420 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 419 வேலைவாய்ப்பு மற்றும் 04 முதலீடு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 
ஆனால். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனையின் மூலம் வடக்கின் அபிவிருத்திக்காக 666.712 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 4833 வேலைவாய்ப்புக்கள் மற்றும் 26 செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட் டுள்ளன.
 
யாழ்ப்பாணத்தில் 9 வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் 7 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் 7 வேலைத் திட்டங்களில் 6 திட்டங்கள் கிளிநொச்சியில் 5 வேலைத் திட்டங்களில் 3. மன்னார் 9 வேலைத் திட்டங்களில் 8 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
தெற்கில் காணப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் வடக்கிற்கும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பமும் குறிக்கோளுமாகும்.
அந்த வகையில் நாட்டில் சுதந்திரத்தை சிங்களவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ள வில்லை. தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து பெற்றுக் கொண்டுள்ளோம்.
 
ஆசியாவிலும் இலங்கை பொருளாதார வளர்ச்சியில் எழுந்து நிற்க வேண்டும். கசப்பான யுத்தத்தின் பின்னர் ஒரே இனத்தவர்கள் என்ற ரீதியில் தெற்கில் காணப்படும் அனைத்து வசதிகளும் வடக்கிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் குறிக்கோள் ஆகும். அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரதேசத்தினை கட்டி எழுப்ப வேண்டும்.”
 
எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி வடக்குக்கு ரயில் பாதையைத் திறந்து வைக்கிறார். என்றும் அமைச்சர் தெரி வித்தார். பாரம்பரிய கைத்தொழில் சிறு முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பேசுகையில் : பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் அபிவிருத்தியுடன் முதலீட்டு வாய்ப்புகளும் எமக்கு இல்லாமற் போனது. பயங்கரவாதம் முடிந்த பின் அரசு பாரிய முதலீடுகளை வடக்கில் மேற்கொண்டுள்ளது என்றார்.
 
குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் முருகேசு, முதலீட்டுச் சபைத் தலைவர் கலாநிதி லக்ஸ்மன் ஜயவீர, பணிப்பாளர் சபை உறுப்பினர் ஸாகர குணவர்த்தன, யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டுச் சபையின் யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் ஜயமனன். லேக்ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் உட்பட அநேகர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment