Friday, September 12, 2014

பாகிஸ்தானுக்கு வேவுபார்த்தமைக்காக சென்னையில் கைது செய்யப்பட்ட அருண் செல்வராசா புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்: டைம்ஸ் ஒப் இந்தியா!

Friday, September 12, 2014
சென்னை::பாகிஸ்தானுக்கு வேவுபார்த்தமைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட அருண் செல்வராசா, புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்று த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 
 
இந்திய புலனாய்வு பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 15ம் திகதிக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 
 
அவர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 
இதற்கிடையில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக புலனாய்வு பிரிவினரின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பாக்கிஸ்தானிற்காக வேவுபார்த்த சந்தேகத்தின் பேரில் புலிகள் இயக்கத்தை சேர்ந்த இலங்கை தமிழர் ஒருவர்  கைது செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து இது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் அவசரபேச்சுக்களை மேற்கொள்வதற்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கான அனுமதியை கோரும் கடிதமொன்றை அவர்கள் உள்துறை அமைச்சிற்க்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
இவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் டைரி, வரைபடங்கள், இந்தியா, இலங்கை கடவுச் சீட்டுக்கள் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இவரது வங்கி கணக்கில் இந்திய ருபாய் 2 கோடி வரை பணம் இலங்கையில் இருந்து இணையம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அண்மையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேன், கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி ஆகியோருடன் அருண் செல்வராஜூக்கு இடையே நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
மேலும், சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து நீண்டநாள் தங்கியிருப்பதும், சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் உளவு பார்த்திருப்பதும், பல முக்கிய இடங்களைப் படம் பிடித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அருண் செல்வராஜை வரும் 25ம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐக்காக தென்னிந்தியாவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழரான அருண் செல்வராஜா, புலிகளின் உறுப்பினர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
நேற்று முன்தினம் அவர் சென்னையில் வைத்து கைதான பின்னர் நேற்று வெளியான செய்திகளின்படி அவருக்கு இலங்கையிலும் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும் இன்று வெளியாகியுள்ள செய்தியில் அவர்  புலிகளின் உறுப்பினராக இருந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
புலிகளுக்கு தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
 
விசாரணைகளின்படி அருண் செல்வராஜா பாகிஸ்தானிய ஐஎஸ்ஐ உளவுப் பிரிவுக்கு முக்கியமான சொத்தாக செயற்பட்டுள்ளார்.அவர் ஐஎஸ்ஐக்காக உளவு பணிகளில் மாத்திரம் ஈடுபடாமல், பயங்கரவாத தாக்குதல்களுக்கான தயார்படுத்தலுக்கும் உதவியளித்துள்ளார்.
 
குறிப்பாக அவர் கல்பாக்கம் அணுஉலை, கோயம்புத்தூர் சந்தை மற்றும் விமான பயிற்சி நிலையம் என்பவை தொடர்பில் தகவல்களை திரட்டியிருந்தார்.
 
அவர், கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து லெப்டொப், எப்பல் ஐபேட், 6 கைத்தொலைபேசிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் இரண்டில் ஒன்றில் இலங்கையர் என்றும் மற்றதில் இந்தியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்திய கடவுச்சீட்டில் அவருடைய பெயர் சரவணமுத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அருண் செல்வராஜா, கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரியான அமிர் ஸுபைர் சித்தீக்கினால் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மற்றும் ஒரு பாகிஸ்தானிய அதிகாரியினாலேயே அவர் வழிநடத்தப்பட்டுள்ளார்.
 
இந்தநிலையில் பாகிஸ்தானிய நிதியுதவியில் அருண் செல்வராஜா, இந்தியாவில் ஐசி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அங்கிருந்து முன்னணி பாடகர் ஜேசுதாஸ் போன்றோரின் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
அத்துடன் இந்தியாவின் நிர்வாக அதிகாரிகளுடனும் அவர் தொடர்புகளை பேணிவந்துள்ளார்.இந்தநிலையில் விசாரணைக்குழு ஒன்று அவர் தொடர்பில் இலங்கைக்கு சென்று விசாரணைகளை நடத்தவுள்ளதாக  தேசிய புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
 
இதேவேளை இந்தியாவில் பாகிஸ்தானுக்கான உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில் 2013 ஆம் ஆண்டில் இருந்து அருண் செல்வராஜாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஹைதராபாத்தில் ஐஸ் இவென்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்த அருண் என்ற இலங்கைப்பிரஜையை சிலமாதகாலமாக கண்காணித்து வந்த பின்னரே கைது செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment