Monday, September 1, 2014

ஈராக்கில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு!

Monday, September 01, 2014
வாஷிங்டன்::ஈராக்கில் குர்தீஷ்தானில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பகுதிகளில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கு வாழும் மைனாரிட்டி மக்களை காக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே சிஞ்சார் பகுதியில் யாஷிடி பூர்வீக குடிமக்களை காக்க இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிவாதிகளுக்கு பயந்து சிஞ்சார் மலையில் தங்கியிருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் விமானம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
 
அமிர்லி என்ற நகரத்தின் அருகேயும் தீவிரவாதிகளின் நிலைகளின் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இங்கு துர்க்மென் என்ற மைனாரிட்டி மக்கள் பெருமளவில் உள்ளனர். கடந்த 2 மாதங்களாக இவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். மதம் மாற வலியுறுத்தி இவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.
 
அடிப்படை வசதி இன்றி தவிக்கின்றனர். எனவே மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கும் உணவு, தண்ணீர், மருந்து பொட்கள் விமானம் மூலம் வீசப்பட்டன. அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதலில் தீவிரவாதிகளின் 3 நிலைகள் அழிக்கப்பட்டன. ஒரு டாங்கி மற்றும் ஆயுதம் ஏற்றி வந்த ஒரு வாகனமும் குண்டு வீசி தாக்கப்பட்டன.

No comments:

Post a Comment