Sunday, September 28, 2014

ஐக்கிய நாடுகள் சபையின் 69 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சாணக்கியம், துணிச்சல், தலைமைத்துவப் பண்பு, ராஜதந்திரம், தாய் நாட்டுப் பற்று!

Sunday, September 28, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் 69 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய துணிச்சல் மிக்க உரைக்கு மதத் தலைவர்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எ னப் பலதரப்பினரிடையே இருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.
 
உலக நாடுகளுக்கெல்லாம் தலைமைச் செயலகமாக விளங்கும் ஐக்கிய
நாடுகள் சபையில் உலக நாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடியிருந்த பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் எ மது நாடு தொடர்பாகத் துணிந்து கூறிய கருத்துக்கள் அவர் தாய் நாட்டின் மீது வைத்துள்ள அபரீதமான பற்றினை எடுத்துக்காட்டுவதுடன் அவரது சாணக்கியம், தைரியம், தலைமைத்துவப் பண்பு, ராஜதந்திரம் என்பவற்றையும் சுட்டிக் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பிற நாடுகள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகம், இலங்கை மீது தெரிவித்த போர்க் குற்றச்சாட்டு எவ்விதத்திலும் ஆதாரமற்ற ஒன்று எனவும் இது அரசியல் நோக்கம் கொண்டது என்ற உண்மையையும் ஜனாதிபதி ஐ. நா. சபையில் துணிந்து தெரிவித்திருந்தார்.
 
குற்றம் சுமத்தியவர்களின் அரங்கிற்குள்ளேயே நின்று இல்லை அது பொய்யான, சிலரின் தேவைகளை நிறைவேற்றவென சோடிக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு என எவ்விதமான அச்சமுமின்றி துணிந்து ஜனாதிபதி தெரிவித்தமையை இந்து வித்தியா குரு பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்களும், கலாநிதி ஹஸன் மெளலானாவும் பாராட்டியுள்ளனர்.
 
ஒரு நாட்டின் தலைவருக்குள்ள சாணக்கியம், தலைமைத்துவப் பண்பு, இராஜதந்திரம், தாய் நாட்டின் மீதுள்ள பற்று என்பவற்றை ஜனாதிபதியிடம் காணக் கூடியதா கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் எந்தவொரு உலகத் தலைவரும் இது போன்றதொரு துணிவான செயற்பாட்டை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மேற்கொண்டது கிடையாது. கைகள் சுத்தமாக இருப்பதால் ஜனாதிபதி அவ்வாறு துணிந்து கூறினார் என ஸ்ரீ.ல.சு. கவின் மட்டு மாவட்ட அமைப்பாளர் அருன் தம்பிமுத்து தெரிவித்திருக்கிறார்.
 
பலஸ்தீன் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை ஐ. நா. பொதுச் சபையில் கண்டிப்பதற்கு பல முஸ்லிம் நாடுகளே தயக்கம் காட்டிவரும் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது உரையில் அத்தாக்குதல்களை மிகவும் துணிச்சலாகக் கண்டித்திருப்பதானது பலஸ்தீன மக்கள் மீது ஜனாதிபதி கொண்டிருக்கும் பற்றை வெளிக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எ ம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கை கையாண்ட யுக்திகளுக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சட்டத்தரணி டபிள்யூ. எம். கருணாதாச தெரிவித்துள்ளார். உலகம் எதிர்காலத்தில் செல்ல வேண்டிய பாதைக்கான ஒரு வழிகாட்டியாக ஜனாதிபதியின் ஐ, நா. பொதுச்சபை உரை அமைந்துள்ளது என முன்னணி ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உ ரிமைகள் என்ற போர்வையில் அரசியல் நோக்கங்களுக்காக ஏனைய நாடுகள் மீது ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடாது என்ற தெளிவானதொரு செய்தியை ஜனாதிபதி தனது உரையின் மூலம் பலம்மிக்க நாடுகளுக்குத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஐ. நா. பொதுச்சபை உ ரை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
போருக்குப் பின்னர் இலங்கை துரதிஷ்டவசமாக தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சில தேவையற்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இலங்கை உள்ளாகியுள்ளது என்று ஜனாதிபதி அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டிருந்தார்.
 
தமது நாடு இன்று குறைபாடான சமநிலை அடிப்படையில் நடத்தப்படுவதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தினார். இலங்கை மீது மேற்கொள்ளப்படும் வெளியக தலையீடுகள் நாடுகளின் கலாசாரம், சமூகம் என்ற கட்டமைப்புகளை தகர்ப்பதைத் தவிர்க்க முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐ. நா. பொதுச்சபையின் 69வது கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவமிக்க உரையானது ஏனைய நாட்டு தலைவர்களுக்கும் நிறைய படிப்பினைகளை ஏற்படுத்தியிருப்பதாக பேருவளை நகர பிதா மில்பர் கபூர் தெரிவித்தார்.
 
ஐ, நா. சபை பிராந்தியங்களுக்கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் அமைதி- சமாதானம் ஏற்படுவதற்கு பாரிய பங்களிப்பை செய்து வருகின்ற போதிலும், உதவி வழங்கும் நாடுகளின் பணயக் கைதியாக இன்று வலுவுள்ள ஐ. நா. செயற்பட்டு வருவது முழுமையாக மாற்றப்பட வேண்டும் என்றும் மில்பர் கபூர் தெரிவித்தார்

No comments:

Post a Comment