Saturday, September 27, 2014

4ஆம் இணைப்பு:-ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு.. பெங்களூரிலிருந்து லேட்டஸ்ட் தகவல்கள்!!

Saturday, September 27, 2014
சென்னை::முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா:
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் 'தி இந்து'விடன் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
 
அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது.
 ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை, ரூ. 100 கோடி அபராதம்- ஜாமீன் இல்லை- உடனே சிறைக்கு செல்ல வேண்டும்
ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது!!- எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும்
அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!
அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டிய முடியாது!
ஜெ.,க்கு ரூ.100 கோடி அபராதம்
10 வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது!
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பற்றி ஆளுநரிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
குற்றவாளி எனத் தீர்ப்பு - ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற அதிமுக முயற்சி
சட்டம் கடமையை செய்துள்ளது-பா.ஜ.
ஜெ. தீர்ப்பு எதிரொலி... சென்னையில் மாநகர பேருந்துகள் நிறுத்தம்
பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடல்
சென்னையில் ஜெ.வின் போயஸ் தோட்டம் வீடு முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி!
கல்வீச்சு; பயணிகள் காயம்
திருமங்கலத்தில் ரயில் மறியல்
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை, இரவுக் காட்சிகள் ரத்து
மேலூரில் கண்டன ஊர்வலம்
நெல்லை, நாகையில் ரயில் மறியல்
ஜெயலலிதா, சசி, இளவரசி, சுதாகரனுக்கான தண்டனை விவரம் சிறிது நேரத்தில் அறிவிப்பு
அதிமுகவினர் வன்முறை எதிரொலி- தமிழகத்துக்கான பஸ்களை கேரளாவும் ரத்து செய்தது
தமிழகம் முழுவதும் திமுக பிரமுகர்கள் வீடுகள் மீது தாக்குதல்
தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- சித்தராமையா: பெங்களூரில் பாதுகாப்பு தீவிரம்
பண்ருட்டியில் பஸ் ஓடவில்லை
ஜெ. வழக்குத் தீர்ப்பு மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்: தமிழிசை கருத்து
ஜெயலலிதாவுக்கு தண்டனை... இனிப்பு வழங்கிக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!
ஜெ. வழக்கு தீர்ப்பு எதிரொலி: தமிழக வன்முறை நீடிப்பதால் பதற்றம்
தீர்ப்பு எதிரொலி.. மதிய உணவை சாப்பிட மறுத்த ஜெயலலிதா.. அமைச்சர்களும் சாப்பிடவில்லை
சென்னை ராயப்பேட்டை லாய்ட்ஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக மகளிர் அணியினர் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
18 ஆண்டுகள் இழுத்தடித்து கடுமையான நீதிபதியிடம் தானே மாட்டிக் கொண்ட ஜெ.
தமிழகம் முழுவதும் திமுக பிரமுகர்கள் வீடுகள் மீது தாக்குதல்
தென் சென்னை மா.செ. அன்பழகன் வீடு மீதும் தாக்குதல்
கோபாலபுரம் கருணாநிதி வீடு, சித்தரஞ்சன் சாலை ஸ்டாலின் வீடு, அறிவாலயத்திலும் கல்வீச்சு
போலீசார் எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளனர்- பெங்களூர் போலீஸ் கமிஷனர்
ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து..அ.தி.மு.க. மகளிரணியினர் கண்ணீர்!
நல்ல நேரம்… ராகுகாலம்… எமகண்டம் பார்த்தும் ஜெ.வுக்கு எதிராக வந்த தீர்ப்பு
சென்னை நகரில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது
சாலைகளில் வாகனங்களைநிறுத்தி அதிமுகவினர் ஆர்பாட்டம்
அனைத்து வாகனங்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தம்
திருச்சியில் 4 பயணிகள் காயம் என தகவல்
சென்னை சுப்ரமணியசுவாமி வீட்டில் அதிமுகவினர் கல்வீச்சு
கோவை, மதுரையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கல்வீச்சு
நான் தான் புகார் கொடுத்தேன், திமுக பெயர் வாங்குவதா?: சு. சாமி
சங்கரன்கோவிலில் 2 பஸ்கள் கல்வீசித் தாக்குதல்
ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள கடைகளை அடைக்குமாறு மிரட்டும் அதிமுகவினர்
தமிழகம் முழுவதும் போராட்டங்களில் குதித்த அதிமுகவினர்
சசிகலா, இளவரசி, சுதாகரனும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
ஓராண்டுக்குக் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை வராது
எனக்கு உடல் நிலை சரியில்லை.. தண்டனையை குறையுங்கள்- நீதிபதியிடம் ஜெ
சிறை தண்டனை காலம் + 6 வருடத்துக்கு என 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை வரும்
2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது
பட்டாசு வெடித்துக் கொண்டாடக்கூடாது என தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு!
-தமிழகத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில் நவநீத கிருஷ்ணன், ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபடுகிறது
ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ.பதவியும் பறிபோகிறது
ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு
விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்

No comments:

Post a Comment