Thursday, September 4, 2014

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 29 பேர் புலிகளினால் கொல்லப்பட்ட வழக்கு குறித்த தீர்ப்பு நாளை!

Thursday, September 04, 2014  
இலங்கை::முன்னாள் இராணுவ அதிகாரியும், வடமத்திய மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கு தொடர்பிலான தீர்ப்பு நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. இந்தக் கொலை வழக்குத் தொடர்பில் கடந்த 22ம் திகதி நடைபெற்ற விசாரணைகளின் போது, வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான முன்னாள்  புலி கேணல் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாறு குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் இராணுவ கேணலுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு நாளைய தினம் வடமத்திய மாகாண உயர் நீதமன்றில் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 6ம் திகதி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர்.

மாகாண எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது இவ்வாறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. வசந்தன் என்ற தற்கொலைப் போராளியே இந்த தாக்குதலை நடத்தியிருந்தார். குற்றச் செயலை ஒப்புக்கொண்ட இரண்டாம் பிரதிவாதிக்கு நாளைய தினம் நீதிமன்றில் தீர்ப்பு அறிவிக்கபபட உள்ளது.

No comments:

Post a Comment