Thursday,September,04,,2014
ராமநாதபுரம்::இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக
திரைப்பட இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான், மீது கியூ பிரிவு போலீசார்
தொடர்ந்த வழக்கு விசாரனைக்காக, அமீர் மற்றும் சீமான் ஆகியோர் ராமநாதபுரம்
நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.
ராமேசுவரத்தில் கடந்த 2008–ம் ஆண்டு அக்டோபர் 19–ந்தேதி தமிழ்த்திரையுலகம் சார்பில் புலிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கில் மொத்தம் உள்ள 33 சாட்சிகளில் நேற்று 8 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் நவநாதன், இயக்குநர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சோமசுந்தரம், டோமினிக் ரவி ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பிரகாஷ், வழக்கு விசாரணையை வரும் 9–ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment