Tuesday, September 09, 2014
புலிகள் இயக்கத்தை மீளமைக்கும் நோக்கில் செயற்பட்டார்கள் என்றக் குற்றச்சாட்டில் 2 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் அபுதாபியிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர, அவர்களுக்கு எதிராக போலி வீசா அனுமதியில் பயணித்தமை தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணை நிபந்தனையில் விடுவிக்கப்பட்டவர் எனபொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகன தெரிவித்தார்.
குறித்த இரண்டு சந்தேநபர்களும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மி விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த 20 வயதான பாலச்சந்திரன் தவபாலன் அனுசன், மற்றையவர் மன்னாரை நிரந்தரமுகவரியாகக் கொண்டு யாழ். இளவாலையை தற்காலிக முகவரியாக கொண்ட 43 வயதுடைய செபஸ்தியன்பிள்ளை ரொபேட் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment