Monday, September 22, 2014

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு இந்தியா 10 கோடி நிதி உதவி! தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பிளவு நிலை!

Monday, September 22, 2014
இலங்கை::இலங்கை வடக்கு மாகாண தேர்தலின்போது தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதர் ரூ.10 கோடியே 20 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கியதாக ஒரு இணையதள பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
 
வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது. விக்னேஸ்வரன் அந்த மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
 
வடக்கு மாகாண தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதர், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தேர்தல் நிதியாக ரூ.10 கோடியே 20 லட்சம் வழங்கினார். அந்த கூட்டமைப்பின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ரூ.20 லட்சம் என்ற கணக்கில் இந்த தொகை வழங்கப்பட்டது.
 
மிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சி செயலாளர் மாவை சேனாதிராஜா, ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ) செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த பெருந்தொகையை வாங்கினார்கள்.
 
ஆனால் அவர்கள் இந்த தொகையை அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுக்காமல், பெரும் பகுதி பணத்தை தாங்களே எடுத்துக்கொண்டார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த தகவல்களை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் தெரிவித்ததாக கூறியுள்ள அந்த செய்தியில் அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல மேற்கு பகுதியில் உள்ள தமிழ் அமைப்புகள் ரூ.5 கோடியே 70 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது..
 
தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பிளவு நிலை!
 
தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்குள் முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய உட்கட்சி மோதல்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளதாகக் தெரிய வருகிறது. ஐந்து கூட்டுக் கட்சிகளுக்குள் கட்சிகளுக்கிடையிலான பூசலாகவும், அது தவிர ஐந்து கட்சிகளுக்குள்ளும் தனித்தனியாக உட்கட்சிப் பூசலாகவும் முன்னெப்போதும் இல்லாதவாறு மோதல்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
 
தமிழரசுக் கட்சிக்குள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையே நேரடியாகவும், மறைமுகப் பனிப் போராகவும் மோதல்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை அக்கட்சியானது கூட்டமைப்பிலுள்ள ஏனைய நான்கு கட்சிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுச் செயற்பட முனைந்து வருவதால் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
ஐந்து கூட்டுக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து, சம பலாபலன் என உடன்பட்டிருப்பினும் அது பின்பற்றப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் கூட்டமைப்பை பதிவு செய்வதிலும் போலிக் காரணங்களைக் கூறி இழுத்தடிப்பு நிலை காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
கூட்டுக் கட்சியிலுள்ள  சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பையும் தற்போது பெயரளவில் மட்டுமே பயன்படுத்திவரும் தமிழ்க் கூட்டமைப்பு அக்கட்சிகள் இரண்டையும் கூட்டமைப்பிலிருந்து முற்றாக நீக்கிவிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது.
 
அதே போன்று வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் மட்டுமல்லாது சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற ஆரம்ப கால கூட்டமைப்புத் தலைவர்களுடனும் மரியாதையின்றி நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இதேவேளை வெளிநாட்டுப் பயணங்களின் போது தான் திட்டமிட்டுப் புறக் கணிக்கப்படுவதாக  அனந்தி குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. கூட்டுக் கட்சியில்லாத சிலர் உள்வாங்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கேட்டால், தொழில்நுட்ப உதவியாளர் எனத் தெரிவிக் கப்படுவதாகவும் அனந்தி கவலை வெளியிட்டிருந்தார்.

No comments:

Post a Comment