Tuesday, August 12, 2014

அமெரிக்கா, இலங்கை தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது!

Tuesday, August 12, 2014
அமெரிக்கா, இலங்கை தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இலங்கை நிலைமைகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட தகல்கள் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டியுள்ளது.

சுதந்திரமாக கருத்தக்களை வெளியிடுதல், சுதந்திரமாக ஒன்று கூடுதல், அமைதியான முறையில் போராட்டம் நடாத்துதல் போன்ற உரிமைகள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இந்த உரிமைகள் உச்ச அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும், கடந்த 8ம் திகதி அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரில் நடைபெற்ற போராட்டமானது எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும், அது மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

ராஜதந்திரிகள், உறவினர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் குறிப்பிடத்தக்களவு அமெரிக்கர்கள் வாழ்ந்து வருவதாகவும், பெரும் எண்ணிக்கையிலானவாகள் இலங்கைக்கு ஆண்டு தோறும் விஜயம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தங்கியிருக்கும் அல்லது விஜயம் செய்யும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஆபத்துக்கள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகவில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
 

No comments:

Post a Comment