Tuesday, August 12, 2014

பாக்தாத்தில் ராணுவம் குவிப்பு: அமெரிக்கா ஆதரவால் குழப்பம்!

Tuesday, August 12, 2014
பாக்தாத்::பாக்தாத்தில், திடீரென ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபர் புவாத் மசூமின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இது, அந்நாட்டு அரசியல் சூழ்நிலைகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் 
இடையிலான சண்டை, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே, தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள மொசூல் நகரை கைப்பற்றிய பயங்கரவாதிகள், தற்போது, பாக்தாத்தை கப்பற்றும்நோக்குடன் முன்னேறி வருகின்றனர். தலைநகரை இழந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தால், பல நாட்களாக, ராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
 
 எனினும், 'பாக்தாத்தில் நிலைமை மோசமடையவில்லை' என, பிரதமர் நவுரி அல்மாலிகி, தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, பாக்தாத்தில் திடீரென போலீசார், ராணுவத்தினர் அடங்கிய பெரும் படை குவிக்கப்பட்டது. இவர்கள் தொடர்ந்து ரோந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால், ஈராக் அதிபர் புவுாத் மசூம், பாக்தாத்தில் ராணுவ குவிப்பிற்கு உத்தரவிட்டுள்ளார்.
 
அதிபரின் செயலுக்கு, ஈராக் பிரதமர் நவுரி அல்மாலிகி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈராக் அதிபரின் செயல்பாட்டை ஆதரிப்பதாக, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர், மரி ஹார்ப் தெரிவித்துள்ளார். ஈராக்கில் புதிய அரசு அமைய அமெரிக்க ஆதரிப்பதாக தெரிவித்துள்ளதால், அந்நாட்டு அரசியலில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment