Saturday, August 09, 2014
மாவிலாறை புலிபயங்கரவாதிகளின் பிடியிலிருந்து
விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான செயற்பாடு 2006 ஆகஸட் 08 ஆம்
திகதி நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனூடாக கல்லாறு, சேறு நுவர, சேறுவில,
தெஹிவத்த மற்றும் நீலபொல ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 30000 தமிழ் சிங்கள
மற்றும் முஸ்லிம் மக்களின் குடிநீர் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய
நிலங்களுக்கான நீர் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் எட்டு வருடங்களுக்கு முன்னர் பல இராணுவ வீரர்கள்
தங்களது உயிர்களை தியாகம் செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதாபிமான
செயற்பாட்டின் வெற்றி மாவிலாறு பிரதேச வாசிகளுக்கும் விவசாயிகளுக்கும்
பாரிய ஒரு நிவாரணமாகும்.
மாவிலாறு நீர் தேக்கதின் மதகுகள் எல்ரீரிஈ இனரால்
மூடப்பட்டதைத் தொடரந்து அரசு அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தமை
குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment