Saturday, August 9, 2014

கரையோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

Saturday, August 09, 2014
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களை கரையோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் எஸ்எஸ். ரணசிங்க டப்ளுயுடப்ளுயுவி, ஆர்டப்ளுயுபி, யுஎஸ்பி, பிஎஸ்சி அவர்கள் நேற்று  பாதுகாப்பு அமைச்சில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
ரியர் அட்மிரல் எஸ்எஸ். ரணசிங்க கடந்த ஜூலை 23 ஆம் திகதி கரையோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக பதவியேற்றதுடன், இவர் கரையோர பாதுகாப்புப் படையின் நான்காவது பணிப்பாளராவார்.
அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சந்திப்பை நினைவு கூறுமுகமாக புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிவைத்தார்.

No comments:

Post a Comment