Wednesday, August 13, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்திகளை நேரில் பார்வையிடுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
மியன்மாரின் நேய் பை தாவோவில் நடைபெற்ற ஆசியான் 21 மாநாட்டின் போது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்தித்த போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும், இங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிடுமாறும், அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெரிக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” இலங்கைக்கு வந்து யுத்தம் முடிவடைந்த 5 வருட காலப்பகுதியில் நாம் என்ன சாதித்துள்ளோம் என்பதை பார்க்குமாறு கேட்டேன்” என வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment