Wednesday, August 27, 2014
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை
இல்லாதொழிக்கப்பட்டால் நாட்டில் பிரிவினைவாதம் உருவாகக் கூடிய அபாயம்
காணப்படுவதாக தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் சம்பிக்க ரணவக்க
தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதன் மூலம் தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுனர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்படுகின்றது எனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லா தொழிக்கப்பட்டால், மாகாண முதலமைச்சரின் கைகளில் அதிகாரம் குவிந்து விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலைமை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டங்கள் எட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment