Wednesday, August 27, 2014
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில்
97 சதவீதமானவை பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ பேச்சாளர் ருவாண் வணிகசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு
அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்
யுத்தம் நிறைவடையும் போது 5 ஆயிரம் சதுர கிலோ மீற்றரில் நிலகண்ணி வெடிகள்
காணப்பட்டதாக அவர் கூறினார்.
எஞ்சியுள்ள பகுதிகளிலும் கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவில் பூர்த்தியாகும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment