Saturday, August 2, 2014

இலங்கை அரசங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது!

Saturday, August 02, 2014
சென்னை:இலங்கை அரசங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்து.

கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரைய பாதுகாப்பு அமைச்சு இணைய தளத்திலிருந்து நீக்கிக் கொண்டதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது.

மன்னிப்பு கோரியது தொடர்பிலான தகவல்கள் இணைய தளத்தின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனையற்ற மன்னிப்பினை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

உரிய அனுமதியை பெற்றுக்கொள்ளாது ஆக்கம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆக்கத்திற்கும் பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாட்டுக்கும் தொடர்பு கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

கட்டுரை வெளியிடப்பட்ட உடனனேயே ராஜதந்திர ரீதியில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது குறித்து உடனடியாக ராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment