Friday, July 18, 2014

ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது: நவனீதம்பிள்ளை!

Friday, July 18, 2014
ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவின் இணைப்பாளராக சான்ட்ரா பெய்டாஸ் (ளுயனெசய டீநனையள) செயற்பட உள்ளார் என்பது பற்றிய விபரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரொபர்ட் கொல்வில்லியிடம் இலங்கை ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளில் பெரும்பான்மையானவற்றுக்கு அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளும் பிரதிநிதிகள் குழு பற்றிய விபரங்கள் பொதுவாக வெளியிடப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விசாரணைக்குழுவின் நிபுணத்துவ ஆலேசானை வழங்கும் குழுவினர் பற்றிய தகவல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அத்திசாரி, நியூசிலாந்து நீதவான் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக அறிவித்திருந்தார்.

No comments:

Post a Comment