Friday, July 18, 2014
உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப்பகுதியில் சுட்டு
வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் இலங்கையர்கள் எவரும் கிடையாது என
நெதாலாந்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தின் அம்ஸ்டடாமிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்த எம்.எச்.17 ரக விமான உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 295 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஸ்ய ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களினால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த விமானத்தில் இலங்கைக் கடவுச்சீட்டுடைய எவரும் பயணிக்கவில்லை என நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் புத்தி ஆதாவுத தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment