Thursday, July 3, 2014

புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு!

Thursday, July 03, 2014
இலங்கை::புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை அமைச்சில் வைத்து நேற்று முன் (ஜூலை 01) உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
 
19 ஆவது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா அவர்கள் பதவியேற்றதின் பின்னரான முதலாவது உத்தியோக பூர்வ சந்திப்பு இதுவாகும். இதன் போது அவரது புதிய நியமனம் குறித்து செயலாளர் வாழ்த்துத் தெரிவித்தார்.
 
இச் சந்திப்பை நினைவு கூறும் முகமாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச் சின்னமொன்றையும் கையளித்தார்.

No comments:

Post a Comment