Thursday, July 3, 2014

அரசியல் ஆதாயம் பெறும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கபடத்தனம்!

Thursday, July 03, 2014
இலங்கை::முஸ்லிம் மக்களை அரசாங்கத்திடமிருந்து அந்நியப்படு த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் மிக நுணு க்கமாக சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். ஆளும்கட்சி அமைச்சர்கள் எம்.பி.க்களுக்கான விசேட செயலமர்வொன்று பேருவளையில் ஜனாதிபதி தலைமையில் கடந்த திங்களன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்படி கருத்தைக் கூறினார். உண்மையில் இது தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டியு ள்ளது.
 
அளுத்கம, பேருவளை, தர்காநகர் பிரதேசங்களில் நடந்த வன் முறைகளின் பின்னணியில் அரசாங்கத்துக்கு எதிரான தீயசக்திகள் செயற்பட்டிருக்கின்றன என்பது ஊர்ஜிதமாகி இருக்கின்றது. இன முரண்பாடுகளை தூண்டி உள்விவகாரங்களில் தலையிடுவ தற்கு வெளிநாட்டுச் சக்திகள் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. இந்நிலையில் ஐ.தே.கட்சியும் தனது கபட த்தனமான காய்நகர்த்தல்களில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது.
 
தலைமைத்துவம் இல்லாத கட்சியாகத் தடுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஏதோ ஒருவகையில் மக்கள் செல்வாக்கைப்பெற வேண்டுமென்று துடியாய்த்துடிக்கின்றது. அதற்காக எதையும் செய்யலாமென்ற நிலைக்கு இன்று ஐ. தே. க. தலைமை வந்திருக்கிறது போல் தெரிகிறது. இன முரண்பாடுகளை உசுப்பிவிட்டு அரசியல் இலாபம் பெறலாம் என்ற அற்பத்தனமான முயற்சிகளில் ஐ. தே. க. இறங்கி யிருப்பது மிகவும் கேவலமானது.
 
ஒருகாலத்தில் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் ஐ. தே. க. ஆதர வாளர்களாகவே இருந்தார்கள். கூடுதலான முஸ்லிம் எம்.பி.க்கள் ஐ.தே.கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்பட்டிருந் தார்கள் என்பது கடந்தகால வரலாறு. என்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐ.ம.சு.மு. அரசாங்கத்தின் நாடு தழுவிய அபிவிருத்தியில் திருப்தி அடைந்துள்ள முஸ்லிம்கள், ஐ.ம.சு.மு. அரசுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.
டந்த கால ஜனாதிபதித் தேர்தல்களிலும் சரி, பொதுத் தேர்தல்களிலும் சரி, முஸ்லிம் மக்கள் இதனை வாக்குப் பலத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இதனைச் சகிக்க முடியாத ஐ.தே.க. இன்று அரசாங்கத்திலிருந்து முஸ்லிம்களை பிரித்து தங்கள் பக்கம் இழுக்கலாமென மிக நுணுக்கமான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருக் கின்றது.
 
உட்கட்சி மோதல்களினால் தலைமைத்துவமே இல்லாது ஐ.தே.க. சிதறிக் கிடக்கும் இன்றைய காலகட்டத்தில் ஆட்சியைப் பிடிக்கலாமென்ற அற்ப ஆசையில் களத்தில் இறங்க முயல்வது முதிர்ச்சியில்லாத தனத்தையே காட்டுகிறது.
 
ஐ.தே.க. கிராமப்புறங்களில் குழுக்களை அமைத்துக்கொண்டு தவறான பிரசாரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதேபோன்று பொய்ப் பிரசாரங்களை நாட்டில் பரப்புவதற்கும் குழுக்களை அமைத்துள்ளனர். இந்த தவறான பிரசாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அதிகார வெறியில் இவர்கள் இருப்பதனால் நாட்டின் அபிவிருத்திகளைக் கூட கண்மூடித்தனமாக விமர்சிக்கின்றனர்.
 
எதிர்க்கட்சித் தலைவர் தினமும் கட்டவிழ்த்துவிடும் கதைகளால் மக்கள் குழப்ப நிலையடைந்தாலும், அவரை ஒரு ‘குழப்பவாதி’ என்ற நிலையிலேயே பார்க்கின்றனர். வீதி நிர்மாணப் பணிகளின்போது ஒரு கதையை அவிழ்த்து விடுவார். ஒரு கிலோ மீற்றருக்கு இவ்வளவு தொகையா? என்று கேட்பார். அதேவேளை மஹிந்தோதய ஆய்வுகூடத் திட்டத்தோடு கல்வித் துறை முன்னேற்றமடைவதைத் தாங்கிக்கொள்ள முடியாது ரணில் விக்கிரமசிங்க அதற்கு அரசாங்கம் பணம் அறவிடுவதாகக் கூறினார்.
இதேபோல், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து இலவசக் கல்வியை அரசு வீணடிப்பதாக ரணில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
 
 இவைகள் அனைத்துமே பொய்யென சர்வதேச நாணய நிதியமே அறிவித்ததும், இப்போது வாய் மூடி மெளனியாகிவிட்டார். ஆகவே நாட்டில் வதந்திகளைக் கிளப்பிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதில்  கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.தே.க.  நுணுக்கமான சதிகளில் ஈடுபடுகிறது. அதேநேரம் மக்களைப் பிரித்தாளுவதிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுபடுகிறது. இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment