Wednesday, July 30, 2014

புலிகளின் எளினலால் காணாமற் போனவர்களின் பெற்றோர்கள் ஆனந்தியிடம் தனது உறவினர்கள் பற்றி ஆவேசத்துடன் கேள்வி!

Wednesday, July 30, 2014
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவரான ஆனந்தி சசிதரனால் முல்லைத்தீவு நீதி மண்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தொடரப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளுக்காக 2014 ஜூலை 21 ஆம் திகதி ஆனந்தி சசிதரன் சமூகமளித்திருந்தார். அங்கு அவர் எதிர்பாராத வகையில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஆனந்தியின் கனவரான எழிலனால் கடத்தப்பட்ட தங்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கே என்று மிகவும் ஆவேசத்துடன் கேள்வியெழுப்பினர், இதனால் ஆனந்திக்கு பாதுகாப்பு படையினரின் உதவியை நாட வேண்டிய நிலமையும் ஏற்பட்டது.

நீதி மண்றத்திற்கு முன்னால் தங்களது உறவினர்கள் தொடர்பில் ஆனந்தியிடம் கேள்வி கேட்க திரண்டிருந்த மக்கள்
புலிகளில் அதிகமானோர் வன்னியைச்சேர்ந்வர்களே இருந்தனர் அதில் அதிகமான சிறுவர்களும் அடங்குவர். எல்ரிரிஈயினரும் ததேகூ இணைந்து செய்த இக் குற்றச்செயல்களை யாழ் மக்கள் வெளியுலகத்துக்குகொன்டு வரவேன்டும்
நவீனமான சுவரொட்டிகள் இந்த சாதாரண மக்களால் அச்சிடப்பட்டிருக்கவில்லை ஆனால் தங்களது உறவினர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைபிடத்திலும் எல்ரிரிஈ இடத்திலும் வினா எழுப்ப இவர்கள் துணிந்தவர்களாக காணப்படனர்
தமிழ் மக்கள் இவ்வாறு திரண்டு வந்து தங்களது பிள்ளைகளைக் கேட்டு தீவிரமாக நடந்து கொள்வார்கள் என்று அனந்தி எதிர்பார்க்கவில்லை
தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினர் ஆனந்தி ஒரு பாதிரியுடன் வான் ஒன்றில் நீதி மன்றத்திற்க்கு சமூகமளித்திருந்தார்.

இந்த தமிழ் குடும்பங்களுக்கு தகுந்த பதில்கள் தேவைப்படுகின்றது
ஐநா வின் மனித உரிமைகள் அமைப்பு இவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
எந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனமும் இவர்களது துன்பத்தை கேட்கவில்லை
எந்த ஒரு வெளிநாட்டு தூதுவரும் கானாமற் போன இவர்களது உறவினர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
தமிழ் மக்கள் திரண்டு வந்து தங்களுடைய பிள்ளைகள் சம்பந்தமாக தன்னிடத்தில் கேட்டு முறண்படுவார்கள் என்று ஆனந்தியும் எதிர்பார்க்கவுமில்லை.
தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினர் என்ற வகையில் ஆனந்தி இவ்வாறு கேள்விகளுக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்கவுமில்லை.
ஆனந்தியாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குற்றம் சுமத்திப் பேசப்பட்ட இராணுவத்தினரின் உதவியை கோர வேண்டிய நிலையும் ஆனந்திக்கு ஏற்பட்டது.. !
ஆனந்தி சசிதரனிடம் பதில் கேட்டு 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நின்றிருந்தனர்..
ஆனந்தியிடத்தில் 2014 ஜூன் 14 இல் இருந்து அவர்களது கேள்வி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜுன் மாத்தில் அனந்தி, சுரேஷ் பிரேம சந்ரன், சிவாஜிலிங்கம், செல்வராசா கஜேந்ரன், கஜேந்ரன் பொன்னம்பலம், துரைராசா ரவிகரன், அன்டோனி கஜேந்திரன் போன்ற த.தே.கூ இன் உறுப்பினர்களுடன் நீதிமன்றத்திற்க்கு வந்திருந்தார், இவரின் கணவனுக்கு சிறுவர்களைக் கடத்தி கட்டாயப்படுத்தி போராளிகளாக்கிய குற்றச்சாட்டும் உண்டு..
ஜூலை 21 ஆம் திகதி ஆனந்தியுடன் கிரிஸ்தவ பாதிரியார் மாத்திரமே காணப்பட்டார்.
இந்த தமிழ் குடும்பங்களுக்கு தகுந்த பதில்கள் தேவைப்படுகின்றன ஐநா வின் மனித உரிமைகள் அமைப்பு எல்ரிரிஈ இயக்கத்தால் கடத்தப்பட்ட சிறுவர்கள் எங்கே என்று ஆனந்தியிடம் கேட்கவில்லை, எந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனமும் இவர்களுக்கு கை கொடுக்கவில்லை எந்த ஒரு வெளிநாட்டு அமைப்போ,நவிப்பிள்ளையோ கானாமற் போன இவர்களது உறவினர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுமில்லை இதனால் இக்குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு உதவியாளர் திரு.கணகரடனம் ஊடாக ஜனாதிபதி அவர்களுக்கு மனு ஒன்றை சமர்பித்தனர்..
ஆனந்திக்கு மேற்கத்தய நாடுகளின் அரச சார்பற்ற நிறுவனங்கள் எவ்வாறு ஊடகங்களில் தனது காணாமற் போன எல்ரிரிஈ உறுப்பினரான கணவன் தொடரபில் பேச அனுமதியளித்தன? காணமல் போன இவர் தான் கடைசி யுத்த நடவடிக்கைளின் போது பெற்றோர்களிடமிருந்து சிறுவர்களை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுக்குரியவர்.
இந்த அப்பாவியான தமிழ் மக்களை சந்திப்பதிலும் தங்கள் உனர்வுகளை பரிமாரிக் கொள்வதிலும் அமரிக்க தூதுவரான ஜே.ரெப் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றாரா? புலிகளால் கடத்தப்பட்ட தங்களது சிறுவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா என்று தெரியாமல் அவர்களை நீண்ட காலமாக ஏங்கித் தவிக்கின்றனர்.


உண்மையில் புலிகளின் தோல்வியின் பின்னர் தொகுக்கப்பட்ட அறிக்கைகள் எதுவும் எல்ரிரிஈ மற்றும் ததேகூ இன் குற்றங்களைப்பற்றி விவரிக்கவோ அல்லது கட்டாயப்படுத்தி தமிழ் சிறுவர்களை போராளிகளாக சேர்ப்பதற்க்கு மறைமுகமாக செயற்படட பிரதிநிதிகளை பற்றியோ கூறவே இல்லை.


காணாமற் போன ஆனந்தியின் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கணவன் சமபந்தமாக அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும் சில நிறுவனங்கள் காட்டும் அக்கரை, காணாமற் போன 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் மேல் இல்லை இவர்களைப்பற்றி ஊடகங்களோ நிறுவனங்களோ பேசவில்லை. ஆனால் இலங்கையின் நடு நிலையான ஒரு ஆங்கில ஊடகம் புலிகளால் கட்டாயப்படுத்தி போராளிகளாக்கப்பட்ட தமிழ் மக்களின் அவல நிலைக்கு முக்கியத்துவம் வழங்கி பேசியுள்ளது மேலும் உன்மையில் வன்னி தமிழர்களை பற்றி யாழ் தமிழர்கள் தெரிந்திருக்கவுமில்லை கவலைப் படவுமிவில்லை காரணம் அரவர்கள் தாழ்ந்த இனத்தவர்கள் என்று நினைக்கின்றனர்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நற்பெயர் காணாமல் போய்விட்டது. விடுதலைப்புலிகளின் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைபின் கொடூரமான பக்கங்களை கண்டறிந்த மக்கள் இவற்றை விட்டு விலகி வாழ்கின்றனர், இவ்விரண்டு இயக்கங்களுக்கிடையிலான தொடர்பு தெளிவாக தெரிவதுடன் அது பாரிய விரிசல்களை வெளிக்கட்டுகின்றது தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஒரு பெயரில் உருவாக எண்ணுகின்றது
காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களது துக்கத்தை வெளிக் காட்டுவதற்காக வேண்டி வெறுங் காலுடன் நடந்து வந்து ஊடகங்களை முன்னோக்கினார்கள் ஆனால் ஊடகங்களும் பக்கச்சார்பாக நடந்துகொண்டது அசாதாரணமாகும் ஜூன் மாதமும் ஊடகங்கள் அப்பாவி தமிழ் மக்களின் துயரத்தை வெளி உலகிற்க்கு காட்டாமல் பாரபடச்சமாக நடந்து கொண்டன அப்படியே திரும்பவும் செய்கின்றனர். ஊடகங்களினூடாக பல மில்லியன் பிரச்சாரங்கள் மேற் கொள்ளப்பட்டாலும் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் கதை மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகினறது.

சம்பந்தமான காணொளி


No comments:

Post a Comment