Thursday, July 03, 2014புது டெல்லி::பா. ஜனதாவை உளவு பார்த்த விவகாரத்தில் அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையான என்.எஸ்.ஏ அமைப்பு கடந்த 2010ம் ஆண்டு பா.ஜனதா கட்சியை உளவு பார்த்தது. இதற்கான அனுமதியை அமெரிக்காவின் அன்னிய நாடுகள் உளவு நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தியா தவிர 193 வெளிநாடுகளையும் அமெரிக்கா உளவு பார்த்த தகவலை என்.எஸ்.ஏ.வின் முன்னாள் ஏஜெண்டு எட்வர்டு ஸ்னோடன் வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளது. மேலும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்கவும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் ஜெய்சங்கர் மூலம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.
அமெரிக்க உள்துறை மந்திரி ஜான் கெர்ரி விரைவில் இந்தியா வரவிருக்கிறார். அவரிடமும் மத்திய அரசு தனது எதிர்ப்பை தெரிவிப்பதுடன் இந்த விவகாரத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment