Monday, June 23, 2014

அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கப்பட உள்ளதது: நியோமல் பெரேரா!

Monday, June 23, 2014      
இலங்கை::அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், விசாரணைக்குழு பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை எனவும் ஆளும் கட்சி பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் திர்மானம் 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஓர் பொது ஆவணம் எனவும் அதனை எவரும் பார்வையிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

என்ன காரணத்தி;ற்காக சர்வேச விசாரணைகளை அரசாங்கம் நிராகரிக்கின்றது என்பது குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பொறிமுறைமையின் மூலம் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை இதனை சீர்குலைக்கக் கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் தலையீட்டினால் சில நாடுகள் பாதக விளைவுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஈராக் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை உதாரணமாக குறிப்பிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment