Monday,June,23,2014
ஸ்லாவ்யானோகிரிஸ்க்::உக்ரைன் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது அந்நாட்டு அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், மத்திய ரஷ்யப் படைகளை போருக்குத் தயாராகும்படி அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உத்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளைக் கவித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ராணுவத்துடன் கடும் சண்டையிட்டு வருகின்றனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று நேட்டோ குற்றம் சாட்டியது. இந்த நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டுவரும்படி அங்கு அமைதியை நிலைநாட்டும் முயற்ச்சியாகவும் அதிபர் பெட்ரோ போரோ முதற்கட்டமாக ஒரு வாரத்துக்கு போர்நிறுத்த அறிவிப்பினை வெளியிட்டார்.
ஆனால் அவரது யோசனையை நிராகரித்த ரஷ்யா, கிளர்ச்சியாளர்களிடம் நிபந்தனையேற்ற பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எத்தகைய வாய்ப்பும் அளிக்கப்படாத வரை போர் நிறுத்தம் பலனைத் தராது என்று கூறிவிட்டது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவின்படி ரஷ்ய மத்தியப் படைகளுக்கு கோர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ரஷ்யா தவிர வோல்கா பிராந்தியம்,மற்றும் யூரல் மலைப் பிரேதேசம் உள்ளடக்கிய போர் எச்சரி்ககை அமலில் இருக்கும், என்று ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி கூறியதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்ய படை தளபதி வேலரி ஜெராசிமோவ் தலைமையில் 65,000 வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விமானப்படைப் பிரிவு வீரர்கள் யூரல் மலைப்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்கா அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் ஹொலந்த் ஆகியோர் வரவேற்றுள்ளன. மேலும் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள தனது படையை ரஷ்யா வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் தெரிவித்துள்ளது.
ஆனால், லுகான்ஸ்க் நகரை மக்களின் குடியரசாக அறிவித்துக் கொண்ட கிளர்ச்சியாளர்களின் தலைவர் வேலரிலி போலோ டோவ் கூறுகையில், எங்கள் மண்ணில் இருந்து முழுப் படைகளும் வாபஸ் பெறப்படும் வரையில் ஆயுதங்களை கிழே போட மாட்டோம், என்றார்.
No comments:
Post a Comment