Tuesday, June 03, 2014
இலங்கை::முல்லைத்தீவு வட்டப்பளை கோயில் வருடாந்த உற்சவம் இன்று (ஜூன் 03) முதல் ஜூன் 09 ஆம் திகதிவரை மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வருடாந்தம் நடைபெறும் இந்த நிகழ்வுக்காக உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 4 இலட்சம் பக்தர்கள் பங்குபற்றவுள்ளனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது கோயிலைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் துப்பரவு செய்யும் பணிகள், வீதித் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர நேற்று முன்தினம் நடைபெற்ற பத்திரிகையயாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்வு இம்முறை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களினதும் வடமாகாணசபையின் ஆளுனர் ஜீ ஏ சந்திரசிறி அவர்களினதும் தலைமையில் நடைபெறும் எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment