Tuesday, June 03, 2014
வாஷிங்டன்::இந்தியாவில் பிரதமராகப் பொறுப்பே ற்றுள்ள மோடியின் அரசுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறப்பினர் ஆரோன் உள்ளிட்ட 13 எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர். அப்போதி ஆரோன் பேசியதாவது:
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. சிறிய அரசு மூலம் பெரிய நிர்வாகம் என்ற உறுதியுடன் இந்தியாவில் பொறுப்பேற்றுள்ள மோடி யின் அரசுடனான உறவை வலுப்படுத்துவதற்காக பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழி நடத்துவதற்கு மோடிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது தலைமையிலான இந்திய அரசுடன் இணை ந்து அமெரிக்கா செயல்படும் என்று ஆரோன் தெரிவி்ததார்.
No comments:
Post a Comment