Thursday, June 26, 2014

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அரசாங்கம் திடமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா அறிவித்துள்ளது!

Thursday, June 26, 2014
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அரசாங்கம் திடமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
நல்லாட்சி, மனித உரிமை விவகாரம், நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்பில் நிலுவையாக உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் காத்திரமானதும் ஸ்திரமானதுமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தனி; பிரதிப் பேச்சாளர் மாரி ஹார்ப் (Marie Harf) தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவில் மூன்று முக்கியமான நிபுணர்கள் பெயரிடப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட் தீர்மானத்திற்கு அமைவாக இந்த விசாரணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் விசாரணைப் பொறிமுறைமைக்கு முழு அளவில்  இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

நல்லாட்சி, மனித உரிமைகள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நீதிமன்றின் சுயாதீனத்தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டமென அவர் தெரிவித்துள்ளார். பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அத்திசாரி, நியூசிலாந்தின் உயர் நீதிமன்ற நீதவான் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் இந்த விசாரணைக்குழுவின் நிபுணத்துவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment