Friday, June 27, 2014

வவுனியா நகரசபையில் வேலை கோரி மூன்றாவது நாளாகவும் போராடிய இரு பெண் சுகாதார தொழிலாளர்கள்!

Friday, June 27, 2014
வவுனியா நகரசபையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார தொழிலாளர்களாக பணியாற்றிய இரு பெண்களின் ஒப்பந்தமானது
 
கடந்த மே மாதத்துடன் ரத்துச் செய்யப்பட்டது. இதனால் கணவனை பிரிந்த நிலையில் தமது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த இரு பெண்களும் தமக்கு மீண்டும் தொழிலினை வழங்குமாறு கோரி கடந்த செவ்வாய் கிழமை தொடக்கம் போராடி வருகிறார்கள். 
 
கடந்த செவ்வாய் கிழமை நகரசபை கூரை மேல் ஏறி போராடியவர்கள் தற்போது நநகரசபைக்கு முன்னால் இருந்து தமக்கு வேலை கோரி கோராடி வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கையை இதுவரை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை.
 
பொறுப்பு வாய்ந்த நகரசபை நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

No comments:

Post a Comment