Thursday, June 19, 2014
புதுடெல்லி::இந்தியா வந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ஓ ரோகோசின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ரஷ்ய நாட்டுடன் நடைபெறும் முதல் உயர்நிலை சந்திப்பு இதுவாகும்.
தலைநகர் டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பேணுவது தொடர்பாகவும், வணிகம், எரிசக்தி துறைகளில் புதிய உடன்பாடு ஏற்படுத்துவது ஆகியன குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளை தொடங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில், 3-வது மற்றும் 4-வது அணு உலைகளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி, நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். மேலும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

No comments:
Post a Comment