Saturday, June 28, 2014

கொழும்பு விஷேர்லி சர்வதேச பாடசாலையின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர்!

   
   
   
Saturday, June 28, 2014
வாழ்க்கையில் வெற்றி வாழ்க்கை முன்னேற்றத்திலோ அல்லது பணம் சம்பாதிப்பதிலோ இல்லை அது தனிப்பட்ட இலக்குகளை திறம்பட அடைதல், ஒரு உண்மையான வெற்றிகரமான நபராக இருத்தல், அவர் ஒரு நாட்டின் ஒரு பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருத்தல், சிறந்த பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்பவற்றிக்கு கட்டுப்பட்டவராக இருத்தல் என்பவற்றில் தங்கியுள்ளது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்  (ஜூன் 26) மாலை கொழும்பு விஷேர்லி சர்வதேச பாடசாலையின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
 
கொழும்பு பீஎம்ஐசீஎச் இல் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷ அவர்களும் கலந்துகொண்டார்.
 
1985 இல் நிறுவப்பட்ட விஷேர்லி சர்வதேச பாடசாலையானது தீவின் பழமையான சர்வதேச பாடசாலைகளுல் ஒன்றாகும். பாடசாலை முகாமைத்துவ பணிப்பாளர் பேராசிரியர் புனர்ஜீவ கருணாநாயக, அதிபர் கிங்ஸ்லி ஜயசிங்க, இயக்குனர் பி சரவணன், சிறப்பு விருந்தினர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment