Thursday, June 19, 2014

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவரும் மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினருமான வட்டரக்கே விஜித தேரர் மீது தாக்குதல்!

Thursday, June 19, 2014
இலங்கை::ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவரும் மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினருமான வட்டரக்கே விஜித தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விஜித தேரர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகாமையில் விஜித தேரர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

சாரதியொருவர் காவல்துறையினருக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, விஜித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜித தேரர், பொதுபல சேனா இயக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து அதன் நடவடிக்கைகளுக்கு எதிர்பு வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜித தேரர் முஸ்லிம் கடும்போக்காளர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment