Thursday, June 19, 2014
இலங்கை::மாதகல் கடலில் வைத்து 138 கிலோக்கிராம் கஞ்சாவைத் தாம் கைப்பற்றினர் என்று இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வேளை கஞ்சாவைக் கடத்தியவர்கள் மாட்டிக் கொண்டனர் என்றும், அதில் ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்றும் மறறையவர் கடலில் தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக பெருந்தொகைக் கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலகதிக நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment