Tuesday, June 03, 2014
இலங்கை::இலங்கையில் மாகாணங்களுக்க காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை::இலங்கையில் மாகாணங்களுக்க காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டாலும் மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசினாலும், ஆளும் கட்சி காவல்துறை அதிகாரங்களை வழங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment