Tuesday, June 3, 2014

திமுக தலைவர் கருணாநிதி 91வது பிறந்த நாள் விழா தலைவர்கள், நடிகர் ரஜினி வாழ்த்து!


Tuesday, June 03, 2014
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களை கருணாநிதி பெற்று கொண்டார். நடிகர் ரஜினி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 91வது பிறந்த நாள். காலை 6 மணிக்கு சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் அவர் மரக்கன்றுகளை நட்டார். பின்னர், அவருக்கு ராஜாத்தியம்மாள், கனிமொழி, முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், டி.ஆர்.பாலு, ஜெ.அன்பழகன், பூங்கோதை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திற்கு கருணாநிதி வந்தார். அங்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், பி.கே.சேகர்பாபு, பொன்முடி, ஏ.வ.வேலு, ஆ.ராசா, மா.சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு அங்கிருந்து அண்ணா நினைவிடத்திற்கு கருணாநிதி சென்றார்.

அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட முன்னணி தலைவர்கள் உடனிருந்தனர். பின்னர், கோபாலபுரம் இல்லம் வந்தார். அங்கு, தாய், தந்தை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குடும்பத்தினருடன் கேக் வெட்டினார். அப்போது, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், செல்வம், செல்வி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக கவர்னர் ரோசய்யா பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் போனில் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் சத்யராஜ், பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து செய்தி அனுப்பினார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் போனில் வாழ்த்து தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், சுப.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான தொண்டர்கள் வரிசையில் நின்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், ஆர்.எம்.வீரப்பன், கவிஞர் மு.மேத்தா, சிலம்பொலி செல்லப்பன், தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், சம்சுதீன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்.முத்துராமலிங்கம், வி.பி.துரைசாமி, கல்யாணசுந்தரம், டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, சதாசிவம், மதுரை வேலுச்சாமி, தளபதி, இளைஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன், கோ.வி.செழியன் எம்எல்ஏ, தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment