Wednesday, May 28, 2014

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்: தொலைத்தொடர்பு ஆணைக்குழு!

Cell phones
Wednesday, May 28, 2014
இலங்கை::கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளை பெற்றுக்கொள்ளும் போது அவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை கைத்தொலைபேசி விற்பனையாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
 
இதுவரைக்காலமும் தமது தொலைபேசியை பதிவு செய்து கொள்ளாதவர்கள், 132 என்ற இலக்கங்களை அழுத்துவதன் மூலம் அவற்றை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு கேட்டுள்ளது. இந்த கோரிக்கை, தேவையற்ற குற்றச்செயல்களை தடுக்கவே விடுக்கப்பட்டுள்ளதாக ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment